Saturday, 31 May 2014







Wazir Al Mathin Always Girls' H(ard)eart VS Boys' Heart why ?


ஆண்களிடம் பெண்கள் மிகவும் எதிர்பார்க்கும் 8 விஷயங்கள்!!!






பொதுவாக சொல்லும் போது பெண்கள் ஆபத்தானவர்கள். குறிப்பிட்டு சொன்னால் அவர்கள் மிகவும் மோசமானவர்கள்' என்று யாரோ ஒருவர் சொல்லியிருக்கிறார். எனினும், பெண்களுக்கு என்ன தேவை என்ற கேள்விக்கு உலகெங்கிலும் தேடிப்பார்த்தும் பதில் கிடைக்கவில்லை. மேலும், இழக்காத ஒரு விஷயத்திற்காக ஆண்கள் நம்பிக்கையை விட்டு விடத் தேவையில்லை. பெண்கள் மிகவும் விரும்பக்கூடிய குணங்கள் நம்மிடமும் இருக்கத் தான் செய்கின்றன. ஆண்கள் பெண்களிடம் விரும்பும் 8 விந்தையான விஷயங்கள்!!! இந்த நீண்ட பட்டியலில் உள்ள சில முக்கியமான விஷயங்களைப் பற்றி நீங்கள் தெரிந்து கொண்டால், உங்களுடைய மனதில் உள்ள காயத்தை ஆற்றுப்படுத்த முடியும். இவற்றில் உங்களுக்கு ஏற்ற விஷயத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு, அவளை மகிழ்ச்சிப்படுத்துங்கள்.

1. சூப்பர் மேன்
பெண்கள் பாதுகாப்பாக இருப்பதை மிகவும் விரும்புவார்கள். எனவே, மோசமான விஷயங்கள் மற்றும் இன்னல்களிலில் இருந்து அவளை காக்கும் வல்லமை உங்களிடம் இருப்பதை நிரூபித்துக் காட்டுங்கள்! பிரச்சனைகள் தலையெடுக்கும் போது துணையாக வந்து நிற்கும் ஆண்களை பெண்கள் பெரிதும் வரவேற்பார்கள். எனவே, இந்த வகையில் உங்களிடம் வரும் எந்தவொரு வாய்ப்பையும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளத் தவறாதீர்கள்.

2. நறுமணம்
பெண்களின் பர்ஃப்யூம்களால் ஆண்கள் ஈர்க்கப்படுவது போன்று காட்டப்படும் விளம்பரங்களைக் கண்டு ஆண்களுக்கு போரடித்துப் போயிருக்கும். ஆனால், இதனை உங்களுடைய இடத்திலிருந்து கவனித்துப் பாருங்கள். உங்களுக்கு ஏற்ற டியோவை தேர்வு செய்து பயன்படுத்துங்கள். அதுவும் முதல் முறை டேட்டிங் செல்லும் போது, சோதனை முயற்சியாக டியோவை பயன்படுத்தாமல், முன்பே தேர்வு செய்து பயன்படுத்துங்கள். உங்களுடைய சருமத்தில் எந்த டியோ 

3. ஆச்சரியப்படுத்துங்கள்
ஒரு சாக்லெட்டோ, காதல் கவிதையோ, பரிசுப் பொருளோ அல்லது ஒரு பூங்கொத்து என ஏதாவதொன்றை திடீரென்று ஆச்சரியப்படுத்தும் வகையில் கொடுப்பதால் பெண்கள் மகிழ்ச்சியடைவார்கள். இவற்றை ஆண்களிடமிருந்து பெண்கள் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள். இந்த வழிமுறையில் நீங்கள் 100-க்கு 100 எடுப்பது நிச்சயம்!

4. வெளிப்படையாக இருத்தல்
நேர்மையாக இருப்பது இன்றளவும் கடைப்பிடிக்க வேண்டிய நல்ல கொள்கையாகும். நீண்ட நாட்களுக்கு நல்ல வகையில் உறவை நீடித்து வைத்திருக்க விரும்பினால், அவளிடம் பொய் சொல்ல வேண்டாம். ஆரம்பத்தில் இது உங்களுக்கு சில தடைகளை கொடுத்தாலும், காலப்போக்கில் அன்பை உறுதிப்படுத்தும்.

5. சரியான உடலமைப்பு
6-பேக் அல்லது 8-பேக் உடற்கட்டு இருப்பதைக் கண்டு மயங்காத பெண்கள் யாரும் இருப்பதில்லை. இவ்வாறு கட்டுமஸ்தாக பராமரிக்கப்பட்டு வரும் உடலமைப்பைக் கொண்ட ஆண்களை பெண்கள் பெரிதும் விரும்புவர்கள். எனவே, தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதை ஒரு வழக்கமாகக் கொண்டு, உங்களை மேம்படுத்திக் கொள்ளுங்கள்

6. டிரெஸ்ஸிங்
மோசமாக உடையணிந்திருக்கும் ஆண் மகனை எந்த பெண்ணும் ஏறெடுத்தும் பார்க்க மாட்டாள். அவ்வப்போது வரும் ஸ்டைல்களை பயன்படுத்திப் பாருங்கள், ஸ்டைலாக பேசுங்கள், உங்களுக்கு எது சரியாக வருகிறது என்பதை கவனியுங்கள். ஆள் பாதி, ஆடை பாதி என்பதை முழுமையாக உணருங்கள்.

7. ஹேர் ஸ்டைல் 
அழகான ஹேர் ஸ்டைலை கவனிக்காத பெண்கள் இருப்பதில்லை. சிறப்பான ஹேர் ஸ்டைல் ஒட்டுமொத்தமாகவே ஒரு மாறுபட்ட தோற்றத்தை உங்களுக்கு அளிக்கும். இன்னும் எதற்காக காத்திருக்கிறீர்கள்? பலவகையில் குவிந்து கிடக்கும் ஹேர் ஸ்டைல்களில், கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கும் பாணியை தேர்ந்தெடுத்து தயாராகிக் கொள்ளுங்கள்.

8. கைகள் செய்யும் ஜாலம்
அவள் மிகவும் பசியாக இருக்கும் போது, நகரத்திலுள்ள மிகவும் சிறப்பான உணவு விடுதிக்கு அழைத்துச் செல்லலாம் அல்லது அவளுக்குப் பிடித்த உணவை நீங்கள் சமைத்துக் கொடுப்பதையும் கூட முயற்சி செய்யலாம். இந்த செயல்பாடுகள் எளிதில் மறக்க முடியாத நினைவுகளாக இருக்கும். 'ஆண்களுடைய மனதை விட பெண்களுடைய மனது எப்பொழுதும் சுத்தமாக இருக்கும், ஏனெனில் அவள் அதை அடிக்கடி மாற்றிக் கொள்வாள்' என்றொரு ஜோக் உள்ளது. எனினும், பெண்களின் மனதில் மேற்கண்ட விஷயங்கள் நிலையாக இருப்பதை யாரும் மறுக்கப் போவதில்லை.  

















Thursday, 29 May 2014











The best thing in life is finding someone who knows all your flaws, mistakes & weaknesses, But still thinks you're completely amazing.. <3 <3 <3